வயல் முழுவதிலும் பழமரங்கள் அல்லது வெட்டுமரங்கள் வளர்ப்பது அல்லது மரங்களுடன் சேர்த்து மற்ற பயிர்களையும் ஒரே வயலில் வளர்ப்பது வேளாண்காடு வளர்ப்பு எனப்படும்.
ஈஷாவின் மூலம் இதுவரை 69,670 விவசாயிகள் வேளாண்காடு வளர்ப்பிற்கு மாறியுள்ளனர். அவர்களின் வருமானம் 5 - 7 ஆண்டுகளில் 3 - 8 மடங்கு உயர்ந்துள்ளது.
வேளாண் காடுவளர்ப்பு பலன்கள்:
வேளாண் காடுவளர்ப்பு பயிர்களுக்கு உதவும்:
- உதிரும் இலை, தழைகளால் மண்வளம் அதிகரிக்கிறது.
- பருவகால நோய்கள் மரங்களைத் தாக்காது அதோடு பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளையும் இது கட்டுப்படுத்தும்
வேளாண் காடுவளர்ப்பு விவசாயியின் வருமானத்தை அதிகரிக்கும்:
- மரம் வளர்க்க செலவும் குறைவு, பணியாட்களின் தேவையும் குறைவு
- பணநெருக்கடியான சூழ்நிலைகளில் வெட்டுமரங்கள் ஒரு காப்பீடாக இருக்கும்.
- வாணியப் பயிர்களை சேர்த்துப் பயிரிடும்போது, வருடம் முழுவதும் வருமானம் வந்து கொண்டிருக்கும்.
வேளாண் காடுவளர்ப்பால் வெள்ளம், வறட்சி அபாயங்கள் குறையும்:
- மர வளர்ப்பிற்கு குறைவான நீர்தான் தேவைப்படும்
- மரங்கள் இருந்தால் நிலத்தடி நீரும் அதிகரிக்கும் நதியில் நீரோட்டமும் தொடர்ந்து இருக்கும்.
வேளாண்காடு வளர்ப்பில் ஆர்வம் இருந்தால், இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்வோம்.